வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரம் கொக்குகள் செத்து மடிந்தன.
இது வரலாற்றிலேயே மிக மோசமான வன உயிரின பேரழிவு என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக ஆயிரக் கணக்கான கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள், ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைகளில் தங்கிச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், இம்முறை சுமார் 30 ஆயிரம் கொக்குகள் தங்கியிருந்ததாகவும் அவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த கொக்குகளை கழுகு உள்ளிட்ட பறவைகள் உண்டால் பறவைக் காய்ச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், பறவைகளை அகற்றும் பணி பாதுகாப்பாக நடைபெறுகிறது.