ஆர்க்டிக் பனிப்புயல் காரணமாக கனடாவின் மேற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு பல்வேறு இடங்களில் மைனஸ் 55 சென்டி கிரேடு அளவுக்கு கடுங்குளிர் வீசுகிறது.
இதனால், அல்பெர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் காணும் இடமெல்லாம் பனிப்போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காணப்படுகிறது. இதனிடையே, வான்கூவரில் சாலையோரத்தில் குவிந்த பனியில் குழந்தைகள் உற்சாகமாக சறுக்கி விளையாடினர்.
மேலும், கேல்கரி பனிமலைப் பகுதியில், பொதுமக்கள் பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபட்டனர்.