ஆஸ்ட்ரா ஜெனகாவின் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரானை எதிர்ப்பதில் ஆற்றலுடன் விளங்குவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் ஒமைக்ரான் பாதிப்பதாக கூறப்படும் நிலையில் மூன்றாவதாக செலுத்தப்படும் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி உடலின் ஆன்ட்டி பாடி தன்மையை பாதுகாப்பதாகவும் வைரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
41 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு அதன் பலன்கள் பரிசோதிக்கப்பட்டதாக ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.