சூடானில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 13 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் ராணுவ வீரர்களை கண்டித்து தலைநகர் உள்பட பல்வேறு நகரங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பெண்களை தூக்கிச் சென்று ராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்களை கண்டித்து தலைநகர் கார்தோம், டமாசைன், கோஸ்டி, கடுகுலி, பக்ரி, கசாலா உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.