மியான்மரின் கச்சின் மாநிலத்தில் உள்ள பச்சை மாணிக்க கல் வெட்டும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அதிகாலை 4 மணியளவில், பாகாண்ட் (Hpakant) சுரங்கத்தில் உள்ள ஏரியில் பச்சை மாணிக்க கற்துகள்களை தொழிலாளர்கள் தேடிக் கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
ஏரிக்கரையில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த மண் ஏரியில் இருந்த தொழிலாளர்கள் மீது சரிந்தது.அதில் 70 பேர் வரை சிக்கி உள்ளதாகவும், அவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.