உள்நாட்டு போர் காரணமாக கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் ஏமன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்க போதுமான நிதி இல்லை என ஐ.நா.,தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஏமன் மக்களுக்கு உணவு வழங்கிட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், 2022-ஆம் ஆண்டு முழுவதும் இதற்காக சுமார் 14 ஆயிரத்து 800 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் WFP என அழைக்கபடும் உணவு உதவி திட்டம் தெரிவித்துள்ளது.
ஏமன் மக்களின் பசியை போக்க போதுமான நிதி இல்லாததால் வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 80 லட்சம் மக்களுக்கு குறைந்த அளவிலான உணவு வழங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.,தெரிவித்துள்ளது.
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியா அரசின் துணையுடன் செயல்படும் ஏமன் அரசுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக போர் நடந்து வருவது குறிப்படத்தக்கது.