ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும் 6 மாதங்களுக்குப் பிறகும் கூட சிறந்த பாதுகாப்பு அரணாகவும் விளங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்புட்னிக் நிறுவனம் விடுத்த அறிக்கையில் ஒரே டோஸ் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி பூஸ்டராகப் பயன்படுத்தப்பட்டால் அது ஒமிக்ரான் பாதிப்பை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அனுமதி மரணம் போன்றவற்றை தடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 71 நாடுகளில் சுமார் 400 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் வி யும் பூஸ்டராக ஸ்புட்னிக் லைட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஒமைக்ரானுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று அதிபர் புதினும பாராட்டு தெரிவித்திருந்தார்.