இஸ்ரேல் அருகே 1,500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து ஏசு பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இயங்கி வந்த செசேரியா துறைமுகத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் வீசிய புயல் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கப்பல்கள் மூழ்கின.
அந்த கப்பல்களில் இருந்து ரோம பேரரசு கால வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
நாணயங்களுக்கு மத்தியில் பச்சை கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்ததாகவும், அதில் ஏசுவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.