பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகளுடன் தென்பட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உணவகங்கள், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.