மாடர்னா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பை தருவது ஆய்வக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பான அந்நிறுவனத்தின் அறிக்கையில், புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி குறைந்த அளவில் நோய் எதிர்ப்பு திறனை வெளிப்படுத்தும் நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அதிக பலன் தருவதாக கூறப்பட்டுள்ளது.
நீண்ட கால அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒமைக்ரான் வகை வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் அதன் மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.