தான் பதவியை ராஜினாமா செய்ததற்கு பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமைத்துவம் காரணமல்ல, அரசின் சில கொள்கைகளை ஆதரிக்க முடியாததாலேயே பதவி விலகியதாக முன்னாள் பிரெக்சிட் அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் நடவடிக்கையின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் (David Frost) இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட உடனடி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.
இது இங்கிலாந்து அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் பிரோஸ்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.