பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அங்கு புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த அரசின் விஞ்ஞான ஆலோசனைக் குழு, அரசால் வெளியிடப்படும் பாதிப்பு எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கையில் மாறுதல் இருக்கலாம் என்றும், தினசரி ஒமைக்ரானால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் குறித்து புள்ளி விவரங்களில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் தினசரி 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதித்தோரில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.