அமெரிக்காவின் கொலராடோவில் கடுமையான சூறை காற்று காரணமாக சாலையில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளி பகுதியை நோக்கி வீசியதால் கொலராடோ, நெபராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் , மலைத் தொடரில் இருந்து எழுந்த பிரம்மாண்ட புழுதி புயல் நகரங்களை நோக்கி வீசி வருவதோடு, பல இடங்களில் பலத்த மழையுடன் கடுமையான சூறை காற்றும் வீசியது. மணிக்கு சுமார் 172 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்றால் கொலராடோவின் El Paso County-யில் இந்த விபத்து நடந்தது.