ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, 5 முதல் 11 வயதான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஸ்பெயின், ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில், இவ்வாறு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் ஒரு வார காலத்திற்குள் 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.