சீனாவின் பெய்ஜிங் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லையென ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேச நலனுக்காக அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இனப்படுகொலைகளை கருத்தில் கொண்டும் இந்த போட்டியை புறக்கணிக்கப் போவதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.