மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில், மறைந்த பாடகர் விசெண்டே பெர்னாண்டஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
காதல் மற்றும் காதல் தோல்வி பாடல்களால் மெக்சிகோ மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமடைந்த பெர்னாண்டஸ், 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் கோலோச்சி வந்தார்.
வீட்டில் தவறி விழுந்து முதுகெழும்பில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாட்களாக அவதியுற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 81. மெக்சிக்கன் பாரம்பரிய இசையில் அவர் பாடிய பாடல்கள் இறுதி அஞ்சலியில் இடைவிடாது இசைக்கப்பட்டன.