ஈராக்கில் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பிற்கு பிறகு கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட பழங்கால தொல்பொருட்கள் தலைநகர் பாக்தாத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றி ஒப்படைத்த சுமார் 3 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான களிமண் பலகையும் இடம்பெற்றுள்ளது. மெசபடோமியாவில் எழுதப்பட்ட, வீரன் கில்கமெஷின் காப்பியத்தின் ஒரு பகுதி அதில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஈராக்கிற்கு சொந்தமான 17 ஆயிரத்து 916 கலைபொருட்களை இதுவரை மீட்க முடிந்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுவத் ஹுசேன் தெரிவித்துள்ளார்.