சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பறவைகளை பார்க்கும் வாரம் கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாகத் தொடங்கியது.
ஆண்டு தோறும் குளிர் காலத்தில் சுமார் 7 லட்சம் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக போயாங் ஏரிக்கு வருகின்றன. இதனால் அங்குள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் பறவைகளை பார்க்கும் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 600 பறவை ஆர்வலர்கள் பங்கேற்றனர். போயாங் ஏரியை சுற்றியுள்ள 3 நகரங்களுக்குச் சென்று பறவைகளின் நடவடிக்கைகளை ரசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.