தப்லீக் ஜமாத் அமைப்பைத் தடை செய்வதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக அது இருப்பதால் அதை தடை செய்வதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அரேபிய அமைச்சகம் டுவிட் செய்துள்ளது.
தப்லீக் ஜமாத்திற்கு பெருமளவிலான நிதியுதவி சவூதி அரேபியாவில் இருந்து கிடைத்து வந்தது. எனவே இந்த தடையால் உலகின் பல நாடுகளில் தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகள் இனி மெல்ல மெல்ல முடங்கும் என கூறப்படுகிறது.
சவூதியை தொடர்ந்து வேறு சில நாடுகளும் தப்லீக் ஜமாத்திற்கு தடை விதிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரம் பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம் ஆகிய நாட்களில் இந்த அமைப்பில் நிறைய பேர் உள்ளதால் அங்கு தடை விதிப்பது நடைமுறை சாத்தியமல்ல எனவும் கூறப்படுகிறது.