மிகவும் அரியவகையும் பிரமாண்டமானதுமான பாண்டம் ஜெல்லி மீன் அமெரிக்க கடல்பகுதியில் தென்பட்டது. கடந்த 1899ம் ஆண்டு பார்க்கப்பட்ட இந்த வகை ஜெல்லி மீன்கள் 33 அடி நீள கால் போன்ற இழைகளுடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும்.
தற்போது கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடாவின் அதிக ஆழத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 200 அடி ஆழத்தில் வலம் வந்த பாண்டம் ஜெல்லி மீனை ரோபோ உதவியுடன் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ராட்சத பாண்டம் ஜெல்லிமீன்கள் ஆர்க்டிக் தவிர அனைத்து கடல்களிலும் இருப்பதாகத் தெரிகிறது.