பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில், பெரும் பதற்றத்திற்கு நடுவே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே இந்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தலுக்கான திட்டத்தை, அதிபர் மகமூத் அப்பாஸ் ரத்து செய்தார்.
இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் 154 கிராம கவுன்சில் அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், பெண்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.