தெற்கு ஸ்பெயினில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளின் கூரைகள் மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
பாரா புயலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஸ்பெயின் நகரங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.