அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சமயத்தில் கூட காதில் வயர்டு இயர்ஃபோன்களை பயன்படுத்தியே கமலா ஹாரிஸ் பேசினார்.
அவர் எப்போதுமே புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது, புளூ டூத் இயர்ஃபோன்களை உபயோகிக்கும் போது கைப்பேசியை எளிதில் ஹேக் செய்து விட முடியும் என்பதால் பாதுகாப்பு கருதி அவர் அதை உபயோகிப்பதே இல்லை என தெரியவந்துள்ளது.