ஒமிக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செயலாற்றுமா என உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகாத நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி பதுக்கலை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி பிரிவுத் தலைவர் கேட் ஒ பிரையன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் செயல்திறன் கொண்டிருப்பதாக தரவுகள் வெளியான நிலையில் பதுக்கல்கள் அதிகரிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் செயல்திறன் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து வருவதாக கேட் ஒபிரையன் தெரிவித்தார்.