சீனாவில் கட்டாயப் பணி மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சீனாவின் ஸின்ஜியான்ங் மாகாணத்தில், சுமார் 10 லட்சம் இஸ்லாமிய உய்கர் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களை அடிமைகளாக பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதும் உடனடியாக இந்த சட்டம் அமலுக்கு வரும். மேலும் திபெத்தியர்களை பயன்படுத்தி சீனா தயாரிக்கும் பொருட்களையும், இனி அமெரிக்கா இறக்குமதி செய்யாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.