புதிய ஒமிக்ரான் பரவலுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 டோஸ் தடுப்பூசி மற்ற வேரியன்ட்களுக்கு எதிராக செயல்படக்கூடிய வகையில் உள்ளதாகவும், 3-வது டோஸ் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிரான ஆண்டிபாடிகள் பெருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள் தயாராகி உள்ளதாகவும் அடுத்த கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த நூறு நாட்களுக்குள் மருந்து டெலிவரிக்கு தயாராகிவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர் டோஸ் தொடர்பாக மருந்து கட்டுப்பாடு ஆணையத்திம் அனுமதிக்காக காத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.