ஜெர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் இன்று ஓய்வு பெறுகிறார்.
கடந்த 2005ம் ஆண்டு அவர் பொறுப்பேற்றபின், ஜெர்மனியின் செல்வாக்கை பன்மடங்கு உயர்த்தியவர். தனது ஆட்சிக் காலத்தில் நான்கு அமெரிக்க அதிபர்கள், நான்கு பிரான்ஸ் அதிபர்கள், ஐந்து இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் எட்டு இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தனது பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மெர்கலின் அரசியல் வாரிசு ஓலஃப் சோல்ஸ் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.