கென்யா நாட்டில்பெருக்கெடுத்து ஓடிய ஆற்றின் வெள்ளத்தில் சிக்கி பேருந்து கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், கிடுய் (Kitui) பகுதியில் தேவாலயம் ஒன்றிற்கு சென்ற பேருந்து, அப்பகுதி ஆற்றை கடக்க முயன்றது.
அப்போது எதிர்பாராவிதமாக ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.