மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகிக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளாக ராணுவ அரசு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு, ராணுவ அரசுக்கு எதிராக நடந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆங் சாங் சூகி மற்றும் அதிபராக இருந்த வின் மைண்ட் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இருவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி சிறைத்தண்டனையை 4 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைப்பதாக ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளில் தற்போது வைக்கப்பட்டு உள்ள வீட்டுச் சிறையிலே அவர்கள் இருப்பார்கள் என்றும் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.