பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இரவு விடுதிகளை 4 வாரங்களுக்கு மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டில் இளம் வயதினரும், பள்ளிக் குழந்தைகளும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரவு விடுதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.
பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு இரவு விடுதி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் தாங்கள் மட்டும் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.