ஸ்பெயினில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வரை செலுத்தி இருந்த 70 செவிலியர், மற்றும் மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொற்று உறுதியானவர்களில் 68 பேர் ஒரே மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் என ஸ்பெயின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று உறுதியான அனைவரும் கடந்த 1ஆம் தேதி நடந்த கிறிஸ்துமஸ் விருந்தில் ஒருசேர கலந்து கொண்டதாகவும், அதனால் கூட பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் கிறிஸ்துமஸ் விருந்துகளில் கலந்து கொள்ள வேண்டாமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.