பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்வீட்டர் பதிவில், இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன கொல்லப்பட்டதற்கு தனது வருத்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் தெரிவித்துள்ளாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தியவதனவின் கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இம்ரான்கான் உறுதி அளித்துள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டில் தொழிற்சாலை மேலாளராக பணியாற்றிய பிரியந்த, மதம் சார்ந்த சுவரொட்டியைக் கிழித்ததாகக் கூறி ஒரு கும்பலால் அடித்து நெருப்பிட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 100 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.