இஸ்ரேலில் பாலஸ்தீன இளைஞனை போலீசார் நடுரோட்டில் சுட்டுக் கொன்ற வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் ஜெருசலேமில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்த ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற பாலஸ்தீன இளைஞனை போலீசார் நடுரோட்டில் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலிய போலீசாரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.