வெளிநாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு வந்த 13 பயணிகள் போலியான விவரங்களை கொடுத்திருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வந்த 297 பயணிகளுள் 13 பயணிகளின் முகவரி மற்றும் செல்போன் எண்கள் போலியாக இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்களை உள்ளூர் புலனாய்வு பிரிவு போலீசார் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடான தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 பேர் உத்தரப்பிரதேசத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.