ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மரணம் ஏற்பட்டுள்ளது என இதுவரை எங்கிருந்தும் தகவல் வரவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை திரட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லின்ட்மெயர் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒமிக்ரான் பரவல் விரைவாக இருந்தாலும், தற்போது வரை டெல்டா வைரஸ் மட்டுமே தொற்றிற்கு முக்கிய காரணமாக உள்ளதாக அவர் கூறினார். டெல்டா வைரசில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் விரைந்து எடுப்பதன் மூலம் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பையும் பெறலாம் என அவர் தெரிவித்தார்.