பிரிட்டனில் ஏறத்தாழ 2 கோடி பேர் வரை பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அங்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்ததை அடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்தியும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் பொது மக்களை ஊக்குவிக்கும் விதமாக தாமாக முன் வந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் பூஸ்டர் டோசை செலுத்திக் கொண்டார்.