முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில், ஆஸ்திரேலியே கல்வித்துறை அமைச்சர் பதவி விலக, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியே நாடாளுமன்றத்தில், மூன்றில் இருபங்கு பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, ஓரிரு நாட்களுக்கு முன்பு, தகவல் வெளியானது.
இந்நிலையில், 2017-ல் அமைச்சர் ஆலன் டட்ஜுடன், ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, அவர் தன்னை இடுப்பில் எட்டி உதைத்ததாக, முன்னாள் ஊழியர் ரச்சேல் மில்லர் என்பவர் புகார் அளித்த நிலையில், இதுதொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் வகையில், அமைச்சரை தற்காலிகமாக பதவி விலக, பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதை நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது அறிவுறுத்தலை ஆலன் டட்ஜ் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.