கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
அங்கு சீன அதிபர் ஜின்பிங்-கால் பரிசளிக்கப்பட்ட காஸ்ட்ரோ-வின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமானப் பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ சித்தாந்தங்களை விளக்கும் விதமாகத் திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளது.