நடுக்கடலில் 22 மணி நேரம், தனியே படகில் தவித்த முதியவரை, ஜப்பான் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
யகுஷிமா அருகே, துறைமுக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 69 வயது முதியவர், படகில் தனியே இருந்த நிலையில், படகு வேறு திசையில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது நண்பர்கள் மூலம், இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அவரை பத்திரமாக காப்பாற்றினார்.