டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராகத் திறம்பட செயல்பட்ட தடுப்பூசிகளால் ஒமிக்ரான் வகை கொரோனாவை எதிர்த்து அதே ஆற்றாலுடன் செயலாற்ற முடியாது என Moderna தடுப்பூசி நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அதி வீரிய ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்குப் பரவி வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த Moderna நிறுவனத் தலைமை அதிகாரி ஸ்டீபன் பான்செல் (Stéphane Bancel) தான் கலந்துரையாடிய அனைத்து விஞ்ஞானிகளும் டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் வகை மிகவும் ஆபத்தானது என எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாகச் சரிந்த பொருளாதாரம் மெதுவாக மீண்டு வரும் தருவாயில் தற்போது தோன்றியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனாவால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து பங்குச்சந்தை கடுமையாகச் சரிந்துள்ளது.