லெபனான் நாட்டின் பொருளாதாரம், கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டில், பல இடங்களில் சாலைகளில் வாகனங்கள் மற்றும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டன.
குடிநீர், மின்சார வசதி கிடைக்கவில்லை என்று, குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள், சட்டவிரோத கும்பல்கள் மக்களை அச்சுறுத்துவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்றும் வலியுறுத்தினர்.
மேலும், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, தற்போது 25,000 லிராவாக அதிகரித்துவிட்டதாகவும், வீட்டு வாடகை 2 லட்சம் லிராவாக உயர்ந்துவிட்டது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் குற்றம்சாட்டினர். மேலும், குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாக, அவர்கள் வேதனை தெரிவித்தனர்.