ஜப்பானின் ஒசாகா நகரில், குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி வான் மண்டலம் முழுவதும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது, அங்கு சுமார் 100 ஊழியர்கள் பணியில் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும், பத்திரமாக அங்கிருந்து வெளியேறினர்.
இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில், 64 தீயணைப்பு வாகனங்களும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான குடோன் பகுதி, கடுமையாக சேதமடைந்துள்ளது.