சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு, புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில், வர்த்தகரீதியாக பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
குன்மிங் நகரில் இருந்து, இயற்கை எழில்கொஞ்சும் இரு மலைகளுக்கு நடுவே பயணம் மேற்கொள்ளும் இந்த புல்லட் வேக ரயில், பூமிக்கடியிலும் பயணித்து லாவோஸ் நாட்டை அடையும்.
சீனா- லாவோஸ் இடையே, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் மூலம், சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு, சுமார் ஆறரை மணி நேரத்தில் சென்றடையலாம்