புது வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஆப்பிரிக்காவின் தென் பகுதியை சேர்ந்த 9 நாடுகளில் இருந்து வருவோருக்கு, விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து, அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுவகை வைரஸ் வேகமாக பரவுவதால், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி, மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை, ஆஸ்திரேலியா எடுத்து வருவதாக, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.