மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6 ஆயிரத்து 670 மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ என்ற இடத்தில் ரகசிய ஆலையில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை அடுத்த ஆண்டில் தயாராக வைத்திருக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைத்தையும் தகர்க்கும் வல்லமை கொண்ட மேக் 9 என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது