கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா தொற்று பரவுவதால், அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் பேரிடர் அவசரநிலையை பிறப்பிப்பதாக கவர்னர் கதே ஹோச்சுல் அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக நோய் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 300 க்கும் அதிகமானோர் அட்மிட் செய்யப்படுவதாக அரசாணை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை நியூ யார்க் மாநிலம் முழுதும் பேரிடர் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பவதுடன், நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்படும்.