கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பாகிஸ்தானின் வரலாற்றில் முதன் முறையாக அதன் மொத்த பொதுக் கடனும், திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் 50 புள்ளி 5 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் 20 புள்ளி 7 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மட்டும் அந்நாட்டு அரசின் நேரடி கடனாக உள்ளது. இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற பிறகு அதன் கடன் சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது என அவர் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானின் பொதுக்கடன் 2018 ஜூலை முதல் 2021ஜூன் வரையிலான காலகட்டத்தில் 14 புள்ளி 9 டிரில்லியன் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.