5 முதல் 11 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்கின் தடுப்பூசியை போடலாம் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கி உள்ளது.
10 மைக்ரோகிராம் வீதம் இரண்டு டோசுகளை 3 வார இடைவெளியில் சிறார்களுக்கு போட வேண்டும். எனினும் இந்த தடுப்பூசி வரும் 20 ஆம் தேதி வாக்கில் தான் டெலிவரி செய்யப்படும் என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்த மாத இறுதியில் இருந்து அதை போடத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனிக்கு முதல் கட்டமாக 24 லட்சம் டோசுகள் வழங்கப்படும் என பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.