சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் திட்டங்களுக்கு துணை போகின்றன என கூறி 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா வர்த்தக தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூரை சேர்ந்த மொத்தம் 27 நிறுவனங்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் சீன ராணுவத்திற்கு உதவுவதுடன், சீனாவின் ராணுவ பயன்பாட்டுக்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் அமெரிக்க வர்த்தக அமைச்சர்ஜினா ரெய்மாண்டோ (Gina Raimondo) தெரிவித்துள்ளார்.