சோமாலியாவில் (Mogadishu) ஐ.நா அதிகாரியை குறி வைத்து அல் ஷபாப் (al Shabaab) அமைப்பினர் நிகழ்த்தியத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் மொகதீசு-வில் ஐ.நா அதிகாரி பயணித்த காரின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.
காரில் சென்ற ஐ.நா அதிகாரியின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்க சக அதிகாரிகள் மறுத்து விட்டனர். சோமாலிய அரசை அப்புறப்படுத்திவிட்டு, ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அல் ஷபாப் (al Shabaab) அமைப்பினர் இது போன்ற குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி வருகின்றனர்.